மயோட்டியில் 140 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்! : நூற்றுக்கணக்கானோர் பலி!
11:07 AM Dec 17, 2024 IST
|
Murugesan M
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டி தீவானது பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது.
Advertisement
மூன்று லட்சம் பேரை மக்கள்தொகையாக கொண்ட இந்தக் குட்டித் தீவில், பெரும்பாலானோர் குடிசையில்தான் வசிக்கின்றனர். இந்த நிலையில், மயோட்டி தீவை புயல் தாக்கியதில் ஏராளமான குடிசைகள் சின்னாபின்னமாகின.
மரங்கள் வேரோடு சாய்ந்ததில், குடிசைகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
Advertisement
மயோட்டியில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரும் சேதத்தை இந்தப் புயல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
Advertisement
Next Article