மயோட்டே தீவை தாக்கிய புயலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!
11:47 AM Dec 16, 2024 IST
|
Murugesan M
மயோட்டே தீவை தாக்கிய புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மயோட்டே தீவு மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது.
Advertisement
இந்நிலையில், மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.
தனது கட்டுப்பாட்டில் உள்ள மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு வேகப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article