மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றம்!
மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் இருவழிச்சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
Advertisement
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நேற்று இரவு கரையை கடந்தது. இதன்காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழையானது பெய்தது
இதனால் பல்வேறு இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தது. கிழக்கு கடற்கரை இருவழிச்சாலையில் ஒருபுறம் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் இரு வழி சாலை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது மழைநீர் தேங்கி நிற்கும் பகுதி ஆபத்தான வளைவு கொண்ட பகுதி என்பதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையினர் பேரிகாடுகள் அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.