மருது சகோதரர் குருபூஜை - ஏராளமானோர் பால்குடம் எடுத்து வழிபாடு!
11:55 AM Oct 27, 2024 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் குருபூஜை நிகழ்ச்சியை ஒட்டி ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
Advertisement
வெள்ளையர்களை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்வு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி மாவட்ட எஸ்.பி தலைமையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தின் 13 நுழைவாயில்களில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Advertisement
இந்நிலையில், இந்த குருபூஜை நிகழ்ச்சியை ஒட்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மேலும், கோவை காமாட்சிபுரி ஆதீனம் தலைமையில் யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
Advertisement