மருத்துவருக்குக் கத்திக்குத்து! : விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின்
அரசு மருத்துவரைக் கத்தியால் குத்திய வழக்கில் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷ், ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, விக்னேஷுக்கு ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தன் தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் மருத்துவரை தாக்கியதாக விக்னேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் நேரில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விக்னேஷுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.