செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

12:36 PM Nov 13, 2024 IST | Murugesan M

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி  தாக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது. மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள்.

நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது..

Advertisement

மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்.. ஆனால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை.

மருத்துவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
Chennaidoctor stabbedFEATUREDguindy hospitalMAIN
Advertisement
Next Article