செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

04:01 PM Nov 09, 2024 IST | Murugesan M

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவ மனைகள் தொடர்பான விளம்பரங்களை முறைப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதால், விளம்பரங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தனர்.

விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், மனுதாரர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இருப்பதால், விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement
Tags :
doctors adshospitals adsmadras high courtMAINmedia advertising
Advertisement
Next Article