செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

05:58 PM Dec 14, 2024 IST | Murugesan M

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

உடல்நலக் குறைவால் காலமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழக பா’ஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டைன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இதேபோல், முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு,  முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
Tags :
annamalaievks elangovan passed awayFEATUREDMAIN
Advertisement
Next Article