மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் சூரிய ஒளி ஓவியம்!
02:37 PM Nov 12, 2024 IST
|
Murugesan M
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் ஓவியத்தை சூரிய ஒளியில் வரைந்து இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
Advertisement
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கார்த்திக் என்பவர், சூரியஒளியை கொண்டு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரின் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் ஓவியத்தை சூரிய ஒளியில் வரைந்துள்ளார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Advertisement
Advertisement