மலிவான அரசியலில் ஈடுபடுவதை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது உரிய மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்கவில்லை என மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இப்போது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியலை காங்கிரஸ் செய்வதாக விமர்சித்தார்.
மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளதாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். ஆனால், தொடர்ந்து பொய்களைப் பரப்பிவரும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.