மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்பு - சென்னை மாநகராட்சி முடிவு!
சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Advertisement
மழை காலங்களில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் சில நேரங்களில் நீரில் பழுதாகி சிக்கிக் கொள்கின்றன.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் , 17 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கும் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் 12 ஒற்றை வழிப்பாதை மற்றும் 5 இரட்டை வழி சுரங்கப் பாதைகளில், தானியங்கி தடுப்புகளை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் தானியங்கி தடுப்புகள், சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் வடிந்தவுடன் தானாக திறக்கும் என்றும், இந்த திட்டத்திற்கு 63 லட்சம் முதல் 93 லட்சம் வரை செலவாகும் எனவும் சென்னை மாநகராட்சி மதிப்பிடப்பட்டுள்ளது.