மழையின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம், எருமையூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
வரதராஜபுரம், எருமையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரதராஜபுரம், எருமையூர் குடியிருப்பாளர்கள் சங்கத்தினர், வெள்ள பாதிப்புகளில் இருந்து தங்களுக்கு நிரந்திர தீர்வை ஏற்படுத்தி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தங்கள் பகுதியில் சரியான முறையில் மழைநீர் கால்வாய்களை உருவாக்கி, அடையாறு ஆற்றுக்குள் பாதுகாப்பாக தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை கரையை கடக்கவுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு செல்லும் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வாகனங்களை நிறுத்த முடியாததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம், எருமையூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.