மழை நீர் அதிக அளவில் தேங்கவில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி - விழுப்புரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!
07:15 PM Dec 01, 2024 IST
|
Murugesan M
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே "வெள்ளநீர் அதிகளவில் தேங்கவில்லை" என அமைச்சர் பொன்முடி கூறியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து. கோட்டகுப்பம் அடுத்த ஜாமியத் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி, அப்பகுதியில் வெள்ளநீர் அதிக அளவில் தேங்கவில்லை என்றும், இரண்டடிக்கு மட்டுமே நீர் தேங்கியுள்ளதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
Next Article