மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள அண்ணாநகர் குடியிருப்புவாசிகள்!
சென்னை அண்ணா நகரில், மழை நீர் புகாமல் இருக்க வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில், சென்னையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதியாக அண்ணா நகர் இருந்து வருகிறது. பருவ மழை துவங்கியுள்ள நிலையில், அரசு செய்ய தவறிய முன்னேற்பாடுகளை அண்ணா நகர் குடியிருப்பு வாசிகளே செய்து வருகின்றனர்.
அண்ணா நகர் ஐந்தாவது பிரதான சாலையில், பல வீடுகளின் வாசல் முன்பு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கேட்டில் உள்ள இடைவெளி வழியாக மழைநீர் உள்ளே வரக்கூடாது என்பதற்காக பாலித்தீன் கவர் கொண்டும் அடைத்து இருக்கிறார்கள்.
பருவமழை காலங்களில் மழைநீர் வடிவதற்கு தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.