மஹா சிவராத்திரி பண்டிகை - பொது விடுமுறை அளிக்க ராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தல்!
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆணவப் படுகொலை அதிகரித்திருப்பதாக திமுக கூட்டணி கட்சி தலைவரே தெரிவித்துள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார்.
Advertisement
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தை பூசத்திற்கு அதிமுக அரசு பொது விடுமுறை அறிவித்தது போல இந்தியாவிலேயே அதிக சிவன் கோயில் சிவ பக்தர்களை கொண்ட தமிழகத்திற்கு மற்ற மாநிலங்களில் வழங்குவதை போன்று மஹா சிவராத்திரி அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும்
என்று கூறினார்.
சீமானை இயக்குவது பாஜக என்றார்கள். தற்போது விஜயை இயக்குவது பாஜக என்று சொல்கிறார்கள். அதற்கு முன் எடப்பாடி அதிமுகவை இயக்கியது பாஜக என சொன்னார்கள்.
திமுக வை இயக்குவது யார் என்று கேளுங்கள் என்றும் இந்தியாவில் திமுக வை இயக்குவது எந்த கட்சி என்பதை ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும் எனறும் ராம ஸ்ரீநிவாசன் கூறினார்.