மாசி திருவிழா - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!
02:52 PM Mar 14, 2025 IST
|
Ramamoorthy S
மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் திருவிழாவின் 11-ம் நாள் உற்சவமாக தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.
இதனையொட்டி நெல்லை நகரத்தார் மண்டபத்தில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளம் முழங்க தெப்பத் தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement