மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!
உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு படையிலிட்டு பொதுமக்கள் மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானத்தில், நாட்டு இனத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மாட்டு பொங்கலை ஒட்டி அங்கு பசுக்களுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சாவடிபாளையத்தில் உள்ள கோ சாலையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் தங்களின் மாட்டு வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் அலங்காரம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
நெல்லையில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இல்லங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.