செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் தண்டனை கொடுத்துக்கொண்ட தலைமை ஆசிரியர்!

01:09 PM Mar 14, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Advertisement

போப்பிலி மண்டலத்தில் பென்டா ஜில்லா பரிஷத் என்ற அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்கள் மத்தியில் தனது கவலையை வெளிப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் ரமணா, 'ஆசிரியர்களால் உங்களை அடிக்க முடியாது, திட்ட முடியாது, எதுவும் செய்ய முடியாது’ என தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து தலைமை ஆசிரியர் ரமணா தனக்கு தானே தோப்புக்கரணம் போட்டு தண்டனை கொடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Tags :
Andhra Pradeshgovernment school principal punishing himselfMAINPenta Zilla Parishadstudents study issueVijayanagar
Advertisement