மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டம்? - தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
03:07 PM Dec 26, 2024 IST
|
Murugesan M
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடும் அபாயம் உள்ளதால் கல்லூரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
Advertisement
இதன்பேரில் சேலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement
Next Article