மாணவிகளுடன் பின்னல் கோலாட்டம் ஆடி பிரான்ஸ் தம்பதியினர் மகிழ்ச்சி!
11:00 AM Jan 20, 2025 IST | Murugesan M
கும்பகோணம் அருகே பாகவத மேளா வித்யாலயா மாணவிகளுடன் பின்னல் கோலாட்டம் ஆடி பிரான்ஸ் தம்பதியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மெலட்டூருக்கு வருகை புரிந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் - ஷீஃபர் தம்பதி கிராம மக்களுடன் கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து மெலட்டூரில் உள்ள பாகவேத மேளா வித்யாலயாவை பிரான்ஸ் தம்பதியினர் பார்வையிட்டனர்.
Advertisement
அப்போது, நடைபெற்ற பின்னல் கோலாட்டம் நிகழ்ச்சியை கண்டுகளித்த அவர்கள், மாணவிகளுடன் இணைந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து ஏழு கண்டங்களில் உள்ள பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தங்களது ஒற்றுமை பயணம் தொடரும் என தெரிவித்தனர்.
Advertisement
Advertisement