மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அண்ணாமலையின் கோபம் நியாயமானது - சீமான் பேட்டி!
03:09 PM Dec 29, 2024 IST
|
Murugesan M
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாட்டையால் அண்ணாமலை அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதாகவும், திமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் தெரிவித்த்தார்.
தமிழ்நாட்டில் பிரித்தாளும் செயலை திராவிட கட்சிகள் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
Advertisement
தேர்தல் நேரத்தில்தான் புதிய திட்டங்களை திமுகவினர் வெளியிடுவார்கள் என்றும், மக்களை பற்றி சிந்திக்காமல் தேர்தலை பற்றியே திமுக சிந்திக்கும் என்றும் சீமான் கூறினார்.
Advertisement
Next Article