மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழக அரசு, பல்கலைக் கழகம் மற்றும் மனுதாரர்களான பாஜக, அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் எனவும், 3 காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களை வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
வழக்கின் புலன் விசாரணையை காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது எனக் கூறிய நீதிபதிகள், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விசாரணையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளான அய்வான் ஜமால், சினேகா, பிருந்தா ஆகிய மூவரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்தது. விசாரணை ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குமாறும் தமிழக டிஜிபி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.