மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் - அண்ணாமலை
09:56 AM Dec 12, 2024 IST
|
Murugesan M
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களவை தலைவரை வைத்து எதிர்கட்சியினர் அரசியல் செய்வதாக தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஆளுநராக சிறப்பாக பணியாற்றியவர் ஜகதீப் தன்கர் என்றும், 73 ஆண்டுகளாக இல்லாத ஒரு நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ள தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்றும், மனசாட்சியுடன் பார்த்தால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.
Advertisement