மாநில சுயாட்சி தீர்மானம் - அண்ணாமலை கண்டனம்!
சென்னையில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்க புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக மக்கள் தனது ஆட்சியைப் புகழ்வதாக முதலமைச்சர் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.
மத்திய - மாநில அரசுக்கு இடையேயான உறவு குறித்து ஆராயத் தமிழக அரசு குழு அமைத்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பதற்காக மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
2021-ம் ஆண்டு முதல் திமுக அமைத்துள்ள பல குழுக்களில் இதுவும் ஒன்று எனவும் கடந்த 4 ஆண்டுகளில் குழுக்களுக்காக எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதைத் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 4 தசாப்தங்களாக மத்திய அமைச்சரவைப் பதவிகளை வகித்த திமுக, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற ஒரு குண்டூசியைக் கூட நகர்த்தவில்லை எனவும்
எதிர்க்கட்சியிலிருந்தபோது மட்டுமே மாநில உரிமைகளைப் பற்றி திமுக பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
வாரந்தோறும் அரங்கேற்றும் நாடகங்களை நிறுத்திவிட்டுச் சீர்குலைந்துள்ள நிர்வாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.