மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
பாமக வழக்கறிஞர் பாலு முன்வைத்துள்ள இந்த முறையீட்டில், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு கடந்த வாரத்தில் மட்டும் 3 முறை விலக்கி கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் மனு அளிக்க வழக்கறிஞர் பாலுவுக்கு அறிவுறுத்தினர்.
அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.