சிவகங்கை அருகே பணியிடை நீக்கம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை அடுத்த கல்குறிச்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்த ராஜா மற்றும் சாத்தையா ஆகிய ஆசிரியர்கள் ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.