மாரச் 23ம் தேதி தொடங்கும் 18வது ஐபிஎல் தொடர்!
12:19 PM Jan 13, 2025 IST | Murugesan M
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தாண்டு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் மும்பையில் தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சுக்லா, 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement