மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது நியாயமான போராட்டங்களுக்கு கூட போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பினார். பாலகிருஷ்ணனுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற 24 வது மாநில மாநாட்டில், கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். 81 பேர் கொண்ட புதிய மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது.