செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மார்பில் பாயும் வளர்த்த கடா! : பாகிஸ்தானை பழிவாங்க துடிக்கும் தாலிபான்கள்

08:05 PM Jan 13, 2025 IST | Murugesan M

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததில் இருந்து வந்ததில், தாலிபான் பாகிஸ்தான் உறவில் சரிவு ஏற்பட்டது. 3 ஆண்டுகளில், எல்லை பிரச்னை காரணமாக பாகிஸ்தானுக்கும் தாலிபான்களுக்கும் இடையே சண்டை தீவிரமாகி உள்ளது. நண்பர்களாக இருந்தவர்கள் எப்படி எதிரிகளானார்கள் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

சோவியத் படைகள் வெளியேறிய பின், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தொடங்கியது. அப்போதுதான் தாலிபான்களை உருவாக்கியது பாகிஸ்தான்.

1996 ஆம் ஆண்டு, முதல் முதலாக ஆப்கானில் தாலிபான் ஆட்சி ஏற்பட்டது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைந்து பாகிஸ்தான் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்தது. மேலும், தாலிபான்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் நிதியையும் ராணுவத் தளவாடங்களையும் பாகிஸ்தான் வழங்கியது.

Advertisement

2001ம் ஆண்டு வரை தாலிபானுடன் பாகிஸ்தான் நல்ல உறவைக் கொண்டிருந்தது. ஆனால், 9/11 அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியது.

9/11 தாக்குதலுக்கு அமெரிக்கா தலிபான்களைப் பழிவாங்கத் தொடங்கியது. அந்நேரத்தில், பாகிஸ்தான் தாலிபான்களை முற்றிலுமாக கைகழுவி விட்டு அமெரிக்காவை ஆதரித்தது.

2007ம் ஆண்டில், பாகிஸ்தான் செய்த நம்பிக்கை துரோகத்துக்குப் பழிவாங்க தலிபான்கள் முடிவெடுத்தனர். அதற்காக, 13 தீவிரவாத குழுக்களை ஒருங்கிணைந்து, தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்(TTP) என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இது பாகிஸ்தான் தாலிபான் என்று அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் ஷரியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீவிர இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் TTP அமைப்பு குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது.அப்போதிலிருந்து, பாகிஸ்தான் தாலிபான், பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து தீவிரப் போரில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக 2017 ஆம் ஆண்டில் துராந்த் எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் வேலி அமைக்கத் தொடங்கியது. இது மீண்டும் தாலிபான்களைக் கோபப்படுத்தியது.

இந்த சூழலில், 2021 அமெரிக்கப் படைகள் விலகிய பின், ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றினார்கள். உடனே,அந்நாட்டுடனான எல்லையை பாகிஸ்தான் மூடியது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தாலிபான்களும் வலுப் பெறுவது குறித்து பாகிஸ்தானின் அன்றைய உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கவலை தெரிவித்திருந்தார்.

ஐஎஸ்ஐ-யால் வளர்க்கப்பட்டதால், தாலிபான்கள் பாகிஸ்தானுக்கு நட்பாக இருப்பார்கள் என்று பாகிஸ்தான் நினைத்தது. ஆனால், பாகிஸ்தானின் நம்பிக்கை, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் ஓராண்டு முடிவதற்குள் நீர்த்து போனது.

பாகிஸ்தான் தாலிபான்களின் தீவிரவாத தாக்குதல் நாளுக்கு நாள் அதிகமானது. 2023 ஆம் ஆண்டு மட்டும் 500 ராணுவ வீரர்கள் உட்பட 1,500 க்கும் அதிகமானோர் பாகிஸ்தான் தலிபான்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும், பாகிஸ்தான் தலிபான்கள் 1,758 தாக்குதல்களைப் பாகிஸ்தானில் நடத்தியுள்ளனர். இதில் பாகிஸ்தானின் உயரடுக்கு SSG கமாண்டோக்கள் உட்பட 1,441 இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டனர்.

முன்னதாக, பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்பட்ட ஹக்கானி நெட்வோர்க்கும் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளது. கலீல் ஹக்கானி கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் இராணுவத்தின் தொடர்பு இருப்பதாக தாலிபான்கள் நினைக்கின்றனர்.

இந்த சூழலில், பாகிஸ்தான் தாலிபான் இலக்குகள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஆப்கான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளங்களை தலிபான்கள் கைப்பற்றினர். பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண் அடைந்து வருகிறது.

இந்தமுறை தலிபான் அரசு,சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும்,ஆப்கான் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுகிறார்கள். தாலிபான் அரசு, எல்லை கோட்டு பிரச்சனையில் கடினமான நிலை எடுக்கும் என்று கருதப்படுகிறது. ​​ இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

இதனாலேயே தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement
Tags :
MAINpakistanTalibanFEATURED
Advertisement
Next Article