செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெக வினர்: விரட்டி அடித்த போலீசாருடன் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகள்..!

01:33 PM Feb 03, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ராமநாதபுரம் மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெகவினரை போலீசார் விரட்டியடித்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்விழி ஜெயபாலாவை வரவேற்க ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான தவெக-வினர் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர். இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
MAINtamil janam tvtn policetvk party newstvk vijay
Advertisement