மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
Advertisement
மியான்மர் நாட்டை இன்று காலை 11.50 மணிக்கு 7 புள்ளி 2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. தொடர்ந்து 12 நிமிட இடைவெளியில் 6 புள்ளி 4 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
தொடர்ந்து சிலமணி நேரத்திற்குப் பின் 7 புள்ளி 7 என்ற ரிக்டர் அளவிலான மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இதில் இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் நிலநடுக்கத்தால் மியான்மர் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.