மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்!
11:30 AM Apr 02, 2025 IST
|
Ramamoorthy S
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
முக்கிய விழாவான திருத்தேராட்டம் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. 11ம் தேதி திருக்கல்யாண வைபவமும், நிறைவு விழாவாக 15ம் தேதி 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement