செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மீண்டும் வரலாற்றை உருவாக்கிய இளையராஜா - பிரதமர் மோடி புகழாரம்!

07:17 AM Mar 19, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

இசையமைப்பாளர இளையராஜா மீண்டும் வரலாற்றை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் மாநிலங்களவை உறுப்பினர்  இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி என்றும், சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியண்டை வழங்கியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement

இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டதாகவும்,  இந்த மகத்தான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது உலக அளவில் அவரது சிறப்பை மறுவரையறை செய்து கொண்டே இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Tags :
FEATUREDfirst-ever Western classical symphonyilayarajaMAINPM Modipm modi greetings ilayarajaRajya Sabha MP ilayarajaRoyal Philharmonic Orchestravaliant
Advertisement