செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி

06:38 PM Apr 05, 2025 IST | Murugesan M

இலங்கை அதிபருடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அண்டை நாடான இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, மதிப்புமிக்க மித்திர விபூஷண விருதை வழங்கி இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக கௌரவித்தார்.

பின்னர் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்திய அரசின் உதவியுடன் சம்போரில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அத்துடன் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா, இலங்கையின் சிறந்த நட்பு நாடு எனவும் அனுர குமார திசநாயக தெரிவித்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் எனக்கூறி தனது உரையைத் தொடங்கினார். பின்னர் பேசிய அவர், தனக்கு வழங்கப்பட்ட விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினைகளின்போது இலங்கைக்கு இந்தியா துணை நின்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குக் கடந்த 6 மாதங்களில் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் மானியமாக இந்தியா கடன் வழங்கியிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இலங்கை கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் மகிழ்ச்சிகளுமான செய்தியைத் தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தங்களால் இலங்கை மேன்மேலும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் எனக் கூறிய பிரதமர், மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளைத் திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDIndia VS SrilankaMAINPM ModiWe talked about the livelihood problems of fishermen: Prime Minister Modi
Advertisement
Next Article