மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசனை! : முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
09:36 AM Dec 17, 2024 IST
|
Murugesan M
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் ஆலோசித்தது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் அதிபர் அனுர குமார திசநாயகே பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
மேலும் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசித்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மேம்பட உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Next Article