மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பால்குட ஊர்வலம்!
04:50 PM Mar 27, 2025 IST
|
Murugesan M
கோவில்பட்டி அடுத்த அருணாச்சலம் பேட்டையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜையையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
Advertisement
இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நகரின் முக்கிய வீதிகளில் சென்ற ஊர்வலம், இறுதியாகக் கோயிலுக்கு வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Advertisement
Advertisement