செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முட்டுக்கோவணம் கட்டி ஏர் ஓட்டிய விவசாயிகளுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை மறந்து விட்டீர்களா துரைமுருகன்? - நாராயணன் திருப்பதி கேள்வி!

04:13 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P

முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டிய விவசாய தொழிலாளர்களுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை மறந்து விட்டீர்களா துரைமுருகன்? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், ஈவெ ராமசாமி  இல்லை என்றால் முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டி இருப்பேன் என அமைச்சர் துரைமுருகன் பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டும் உழவர்கள் என்றால் கேவலமா? விவசாயிகள் என்றால் அவமானமா? 1968ல், கீழ வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட ‘முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டிய’ விவசாயத் தொழிலாளர்களுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை நினைவு கூறுகிறீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

1970 ம் ஆண்டு, 2 பைசா மின்கட்டண உயர்வை எதிர்த்து ‘முட்டுக் கோவணம் கட்டி, ஏர் ஒட்டிய’ விவசாயிகளில் மூவரை துப்பாக்கி சூடு நடத்தி பலி வாங்கிய திராவிட மாடல் திமுக அரசின் விவசாய விரோத போக்கை தொடர்கிறீர்களே துரை முருகன் அவர்களே? என்றும் நாராயணன் திருப்பதி வினவியுள்ளார்.

Advertisement
Tags :
ev ramasamyFEATUREDMAINminister duraimurganNarayanan TirupathiTamil Nadu BJP State Vice President
Advertisement
Next Article