செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் ஆவடி ராணுவ உடைகள்!

12:24 PM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னை அடுத்த ஆவடியில் உற்பத்தியாகும் ராணுவ உடைகள் முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Advertisement

சென்னை அடுத்த ஆவடியில் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவ உடைகள், உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த உடையும், உபகரணங்களும் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனகத்தை ஆவடி படைத்தள பொதுமேலாளர் பிஸ்.ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள சுரினாம் என்ற நாட்டிற்கு ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 4 ஆயிரத்து 500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Advertisement
Tags :
Army Uniform Manufacturing Factoryavadiavadin Military uniforms exportChennaiMAINMilitary uniforms manufactured in Avadi
Advertisement