முதலமைச்சர், அமைச்சர்கள் குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை - டிடிவி தினகரன்
03:32 PM Mar 29, 2025 IST
|
Murugesan M
திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக மதுரை அவனியாபுரத்தில் அவர் அளித்த பேட்டியில்
திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார்.
Advertisement
தனி கட்சி ஆரம்பித்து 8 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் கொள்கையை எடுத்துச் செல்கிறோம் என்றும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது, கொலை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மேலோங்கி உள்ளது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் விவகாரம் வேகமெடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
Advertisement