முதலமைச்சர் நிகழ்ச்சி : பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியது!
10:20 AM Jan 27, 2025 IST | Murugesan M
மதுரை அரிட்டாபட்டியில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்துவந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
Advertisement
இதற்காக ஏராளமான அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் அரிட்டாபட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்து வந்த அரசுப் பேருந்து வயல் வெளியில் கவிழும் நிலைக்கு சென்றது.
இதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தை விட்டு வெளியேறினர்.
Advertisement
Advertisement