செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முதலமைச்சர் மீது தமிழக மக்கள்  வெறுப்பில் உள்ளனர் : நயினார் நாகேந்திரன்

07:35 PM Apr 12, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழக மக்கள் வெறுப்பில் உள்ளதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

முதலமைச்சர் மீது தமிழக மக்கள்  வெறுப்பில் உள்ளனர் என்றும், ரூ. 39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறவில்லை என முதலமைச்சர் கூற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

மத்திய அமைச்சர் 39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளார் என்றும் பொதுமக்கள்  பார்வைக்கு 39 ஆயிரம் கோடி ஊழலுக்கான சான்றிதழ்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

நான்காண்டுக் கால குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காகச் சிறப்பாகச் செயல்படுவோம் என உறுதிபட தெரிவித்தார்.

விஜய் இப்போதுதான் புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ளார் என்றும் மக்களின் மனநிலையைப் புரிந்த பிறகு விஜய் பேசினால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் வாக்களிப்பதன் மூலம் யார் வரவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்களே தவிர விஜய்  தீர்மானிப்பது சரியாக இருக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement
Tags :
தமிழக மக்கள்MAINநயினார் நாகேந்திரன்People of Tamil Nadu are angry with the Chief Minister: Nainar Nagendran
Advertisement