திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளை திமுக அரசு எடுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, தந்தை ஆதரித்ததை மகன் நிராகரிப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முட்டாள்களால் சூழப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளை திமுக அரசு எடுப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.