முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் மீனவர் நலன் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் எனப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தன்னுடைய பேச்சு நேரலையில் வருவதை துண்டிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
கடல் பாசி வளர்ப்பு திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கு உதவியளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் திட்டம் எனத் தெரிவித்தார்.
நீலப்புரட்சிக்காக இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் என்ற வாக்குறுதியைப் பிரதமர் நிறைவேற்றி உள்ளார் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், சட்டப்பேரவையில் மீனவர் நலன் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.