முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? - ஹெச்.ராஜா கேள்வி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகர் கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , இணைை பொொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் , பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கனகசபாபதி நாராயணன் திருப்பதி, வி பி துரைசாமி, கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, பாஜகவின் அமைப்பு தேர்தல்கள் மிக துரிதமாக நடந்து வருகிறது. இன்று உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி முடிவு செய்திருக்கக் கூடிய
காலகட்டத்திற்குள் கிளை தேர்தல்களை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.
68 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நீதிமன்றத்தின் மூலம் சிபிஐக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. இது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.
எல்.ஐ.சி விஷயத்தில் எல்லா மொழிகளிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ் வரவில்லை ஆனால் அதை முதலமைச்சர் பெரிய பிரச்சனை ஆக பேசி இருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகன் தமிழ் படிக்கவில்லை என செய்திகள் வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் குடும்பம் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறதா? மொழிக்கொள்கையில் ல் திமுக இரட்டை வேஷம் போடுகிறது என ஹெச்.ராஜா தெரிவித்தார்.