முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!
முதலமைச்சருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கு உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 17 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் துரைமுருகன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், துணை முதலமைச்சர் உதயநிதி எல்லா துறையும் ஆய்வு செய்யலாம் என்றும், அவருக்கு ஒரு முதலமைச்சருக்கு உள்ள அனைத்து அதிகாரமும், துணை முதல்வரான உதயநிதிக்கு உள்ளதாக தெரிவித்தார்.
அதனால் உதயநிதியிடம் தான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இவ்வளவு பெரிய மைதானத்தை கொடுத்த நீங்கள், சுற்றுச்சுவர் கட்டித்தரவில்லையே என துரைமுருகன் தெரிவித்தார்.
இதனால், மாடு மேய்ப்பவர்கள் முதல் மது குடிப்பவர்கள் வரை இந்த மைதானத்தை
பயன்படுத்துவதாக அவர் புகார் கூறினார். எனவே, ஸ்டேடியத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தருமாறு அமைச்சராக கேட்கவில்லை, தொகுதி எம்எல்ஏ-வாக கேட்கிறேன் என உதயநிதியிடம் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.