செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்து சப்ளை இல்லை என புகார்!

07:01 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த "முதல்வர் மருந்தகங்கள்" போதிய மருந்துகள் விநியோகமின்றி முடங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

Advertisement

கடந்த பிப்ரவரி 24ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மத்திய அரசு பாணியில் மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், முதல்வர் மருந்தகங்களில் போதிய அளவு மருந்து சப்ளை இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

Advertisement

இதனால் கவலை அடைந்துள்ள மருந்தக உரிமையாளர்கள், அவசர கோலத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட கிடங்குகளில் போதிய அளவு மருந்துகள் இருப்பில் இல்லை என்று புகார் தெரிவித்துள்ள மருந்தக உரிமையாளர்கள், மக்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
Tags :
DMKMAINMK Stalinபோதிய மருந்து சப்ளை இல்லைமுதல்வர் மருந்தகங்கள்
Advertisement