முதல்வர் விழாவுக்கு கருப்பு நிற துப்பட்டாவுடன் சென்ற மாணவிகள் - அனுமதி மறுத்த போலீசார்!
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கங்கில் பங்கேற்ற சென்ற கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
சிந்து வெளி பண்பாட்டின் எழுத்து முறையை வெளிக்கொணர்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய துணைக் கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது
சிந்துவெளி நாகரிகம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறினார். மேலும், கீழடியைப்போல் பொருநையிலும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை வெளிக்கொணர்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே நிகழ்ச்சிக்காக வந்திருந்த கல்லூரி மாணவிகளில் சிலர் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவிகள் துப்பட்டாவை வெளியே வைத்து விட்டு மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.