முதுநிலை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் - தனியார் மருத்துவர்கள் சாதனை!
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிகளவில் இடம்பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Advertisement
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு, கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் மொத்தம் 7 ஆயிரத்து 971 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் முதல் ஆயிரம் பேரில் 68 பேர், அடுத்த ஆயிரம் பேரில் 67 பேர் உட்பட ஆயிரத்து 25 அரசு மருத்துவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுபற்றி பேசிய அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளின் காலி பணியிடங்களை முறையாக நிரப்பாததே அரசு மருத்துவர்கள் பின்தங்கியதற்கு காரணம் என தெரிவித்தார்.