முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Advertisement
விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள், தேவர் ஜெயந்தி விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நினைவிடத்தின் முன்பாக சிறிய சாலையில் குறுகிய இடத்தில் அதிக கூட்டம் கூடுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அங்கு பொதுமக்களின் வசதிக்காக அரங்கம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முன்பாக ஒரு கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை முகாம் இல்லத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.