முனைவர் சாமி தியாகராஜன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு - அண்ணாமலை
முனைவர் சாமி தியாகராஜன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : "சிறந்த தமிழ் அறிஞரும், தமிழக பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவின் முதல் மாநிலத் தலைவருமான, முனைவர் சாமி தியாகராஜன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த பேச்சாளரான சாமி தியாகராஜன் அவர்கள், திருக்குறள், பெரிய புராணம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் எனத் தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் பலவற்றுக்கும் எழுதிய உரைகள் சிறப்பானவை.
அவரது மறைவு, தமிழ் மற்றும் பக்தி இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு. ஐயா சாமி தியாகராஜன் ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.